Saturday, May 19, 2012

இந்தியாவில் ரோட்டரியின் வளர்ச்சி


உலக அளவில் பார்க்கும்பொழுது கடந்த பத்து ஆண்டுகளில் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் இருந்து கொண்டுதான் கொண்டுதான் இருக்கிறது.

ஆண்டு

உறுப்பினர்கள் எண்ணிக்கை

2001
11,88,492
2002
12,43,431
2003
12,27,545
2004
12,19,532
2005
12,24,297
2006
12,22,788
2007
12,24,168
2008
12,31,483
2009
12,34,527
2010
12,27,563
2011
12,23,413

ஆனால் இந்தியாவில் ரோட்டரி உறுப்பினர்களின் வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் மிக நன்றாக இருந்திருக்கிறது. 27.67 சதவிகிதம் வளர்ச்சி கண்டு முதல் இடத்தில் உள்ளது. வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், விலகுவதும் இன்னொருபுறம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. கீழே குறிப்பிட்டுள்ள ஒன்பது மண்டலங்களைத்தவிர மற்ற இடங்களில் உள்ள சங்கங்கள் உறுப்பினர்களை இழந்து கொண்டுதான் இருக்கிறது.
வ. எண்
நாடுகள்
வளர்ச்சி சதவிகிதம் %
1
இந்தியா
27.67
2
கொரியா
20.71
3
மத்திய கிழக்கு ஐரோப்பா
14.49
4
மத்திய த்ன்கிழ்க்கு ஆசியா
13.52
5
ஆப்பிரிக்கா
12.3
6
லத்தீன் அமேரிக்கா
4.74
7
கரிபியன் தீவுகள்
3.63
8
மேற்கு ஐரோப்பா
1.89
9
பிலிப்பைன்ஸ்
1.69

அதுவும் இந்த ஆண்டில் இந்தியாவில் ஜூலை 2011 முதல் மார்ச் 2012 வரை 9543 உறுப்பினர்கள் இணைந்திருக்கிறார்கள். 37 புதிய சங்கங்கள் உதயமாகி இருக்கின்றன.



இந்தியாவில் உறுப்பினர்கள் எண்ணிக்கை (ஏப்ரல் 2, 2012)      : 1,21,203
மொத்த சங்கங்கள்                                     : 3,134

ஆதாரம்: ரோட்டரி நியூஸ் மே - 2012