Sunday, November 11, 2012

ஒளிமயமான தீபாவளி நல்வாழ்த்துகள்





அனைவருக்கும் மகிழ்ச்சியான, பாதுகாப்பான, ஒளிமயமான தீபாவளி நல்வாழ்த்துகள்

Wednesday, June 20, 2012

புதிய பொறுப்பாளர்கள் பதவி ஏற்கும் பொன்னான நாள்



Every Rotary club in the world, no matter how big or small, 
Has one thing in common: FRIENDSHIP. 
And it’s from this base of friendship that we serve our community

ரோட்டரி ஆண்டின் முதல் மாதம், அனைவருக்கும் முக்கியமான மாதம். துவக்கம் எப்படி மகிழ்ச்சியாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறதோ அது போலத்தான் இந்த ஆண்டு முழுவதும் இருக்கும். அதனால் உங்கள் நண்பர்களுக்கும் அலுவலகத்தில் உடன் பணியாற்றும் நண்பர்களுக்கும், உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள நல்லவர்களுக்கும் ரோட்டரியை அறிமுகப்படுத்த இதைவிட அருமையான நாள் கிடைப்பது கடினம். உடனே செயல்படுங்கள். உங்கள் சங்கத்திற்கு அழைத்து வாருங்கள். இந்த சந்தோசமான தருணத்தில் உங்கள் மகிழ்ச்சியை பன்மடங்கு அதிகப்படுத்திட அவர்களையும் உங்களோடு இணைத்து கொள்ளுங்கள்.

இந்த அருமையான பதவி ஏற்பு விழாவில் புதிய உறுப்பினர்களாக இணைவதில் அவர்களுக்கும் சந்தோசமாக இருக்கும். அவர்கள் நினைவில் மட்டும் அல்ல உங்கள் நினைவிலும் என்றும் நீங்கா இடம் பிடிக்க போகும் நாள் இது. 
புதிய தலைவர், செயலர் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

புதிய உறுப்பினர்களுக்கும், அவர்களை எப்படி அறிமுகப்படுத்துவது என்பதை தெரிந்துகொள்ள இரு கையேடுகளை இணைத்துள்ளேன்.

NewMember Proposal Form and Membership Kits.

Sunday, June 10, 2012

சங்கத்திற்கு நல்ல சக்தியை தாருங்கள்


1.  முதலில நல்ல செயல் திட்டத்தை உருவாக்குங்கள். செயல் திட்டத்தை எப்படி உருவாக்குவது, அதற்கு படிபடியாக உதவி செய்ய சர்வதேச ரோட்டரி அருமையான கையேடு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதனை இங்கே காணலாம்: MembershipDevelopment Resource Guide: 417

2. சங்கத்தை ஊக்குவிக்கவும், நல்ல சக்தியையும் தர உதவும் கையேடு இது.

3.  உங்கள் சங்கம் அடுத்த மூன்று ஆண்டுகளில் எப்படி இருக்க வேண்டும், எந்த உயரத்தை எட்ட வேண்டும் என்று திட்டமிடலாம்.
இதற்கு உதவி செய்ய ஒரு கையேடு-Strategic PlanningGuide

4.  சிறப்பு கூட்டங்கள் ஏற்பாடு செய்து புதிய உறுப்பினர்களுக்கு ரோட்டரி தகவல்களை தரலாம். உங்களை வழி நடத்த
HowHow to Guide for Clubs: 414 உதவும்.

5.    புதிய உறுப்பினர்களை ஈர்ப்பது மிக எளிது. நீங்கள் செயல்படுத்தும் சமூக சேவை திட்டங்களுக்கு அனைவரின் கவனத்தை உங்கள் பக்கம் திருப்பும் சக்தி உள்ளது. அதனால் நல்ல திட்டங்களை செயல்படுத்த உங்களுக்க உதவ ஒரு அருமையான கையேடு.

6. ஒவ்வொரு சங்கமும் சிறந்த தலைவர்களை உருவாக்க வேண்டும். உறுப்பினர்களின் திறமைகளை வளர்க்கவும், பட்டை தீட்டவும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் இளைஞர்கள் பலரை சங்கத்திற்கு கொண்டு வரமுடியும். ஒவ்வொருவரும் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணும் நிலையை உருவாக்க வேண்டும்.

வளமான மிக திறமையான சங்கம் உங்கள் கைகளில் இருக்கிறது. 


Saturday, May 19, 2012

இந்தியாவில் ரோட்டரியின் வளர்ச்சி


உலக அளவில் பார்க்கும்பொழுது கடந்த பத்து ஆண்டுகளில் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் இருந்து கொண்டுதான் கொண்டுதான் இருக்கிறது.

ஆண்டு

உறுப்பினர்கள் எண்ணிக்கை

2001
11,88,492
2002
12,43,431
2003
12,27,545
2004
12,19,532
2005
12,24,297
2006
12,22,788
2007
12,24,168
2008
12,31,483
2009
12,34,527
2010
12,27,563
2011
12,23,413

ஆனால் இந்தியாவில் ரோட்டரி உறுப்பினர்களின் வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் மிக நன்றாக இருந்திருக்கிறது. 27.67 சதவிகிதம் வளர்ச்சி கண்டு முதல் இடத்தில் உள்ளது. வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், விலகுவதும் இன்னொருபுறம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. கீழே குறிப்பிட்டுள்ள ஒன்பது மண்டலங்களைத்தவிர மற்ற இடங்களில் உள்ள சங்கங்கள் உறுப்பினர்களை இழந்து கொண்டுதான் இருக்கிறது.
வ. எண்
நாடுகள்
வளர்ச்சி சதவிகிதம் %
1
இந்தியா
27.67
2
கொரியா
20.71
3
மத்திய கிழக்கு ஐரோப்பா
14.49
4
மத்திய த்ன்கிழ்க்கு ஆசியா
13.52
5
ஆப்பிரிக்கா
12.3
6
லத்தீன் அமேரிக்கா
4.74
7
கரிபியன் தீவுகள்
3.63
8
மேற்கு ஐரோப்பா
1.89
9
பிலிப்பைன்ஸ்
1.69

அதுவும் இந்த ஆண்டில் இந்தியாவில் ஜூலை 2011 முதல் மார்ச் 2012 வரை 9543 உறுப்பினர்கள் இணைந்திருக்கிறார்கள். 37 புதிய சங்கங்கள் உதயமாகி இருக்கின்றன.



இந்தியாவில் உறுப்பினர்கள் எண்ணிக்கை (ஏப்ரல் 2, 2012)      : 1,21,203
மொத்த சங்கங்கள்                                     : 3,134

ஆதாரம்: ரோட்டரி நியூஸ் மே - 2012

Sunday, March 18, 2012

நான் வளர்கிறேனே


நான் வளர்கிறேனே, நண்பர்களே....
நமது ரோட்டரி மாவட்டம் 2980 பெருமையோடு சொல்கிறது.


கடந்த ஐந்து ஆண்டுகாளாக நமது வளர்ச்சி மிக அருமையாக இருக்கிறது. 2007, 2008, 2009 ஆண்டுகளில் சீராக இருந்த வளர்ச்சி 2010-ல் அசுர வேகம் எடுத்தது.  43 புதிய சங்கங்கள் 1385 உறுப்பினர்கள் என்று மிக நல்ல வளர்ச்சியை தந்தவர் முன்னாள் ஆளுனர் Rtn. கோவிந்தராஜ் அவர்கள். பின்னர் அடுத்த வருடம் இருந்த உறுப்பினர்களை தக்க வைத்துக் கொண்டதுடன் மேலும் 6 புதிய சங்கங்களுடன் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் நமது மாவட்டம். இந்த ஆண்டு 2011-12-ல் டிசம்பர் மாதம் வரையில் மூன்று சங்கங்களை இழந்தாலும் 538 உறுப்பினர்களோடு வளர்ச்சிப்பாதையில்தான் நாம். இதற்கு காரணமான அனைத்து நண்பர்களும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.








YEAR 2007 2008 2009 2010 2011 2012
Total Rotarians 30th June 3732 4088 4337 5722 5975 6513
Total Clubs 30th June 97 102 107 150 156 153
District_Governor M.Natarajan S.Arulmozhi chelvan C.Sivagnaselvam N.Govndaraj Joseph Suresh Kumar N.Asoka



வளர்ச்சியின் முக்கியத்துவம் அனைவருக்கும் நன்றாக தெரியும்.

அதனால் கடந்த வருடங்கள் போல நாம் எப்போதும் உறுப்பினர்கள் வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் கொள்ள வேண்டும். 


ஒவ்வொருவரும் உடன் இருக்கும் நண்பர் ஒருவரை தக்க வைத்துக் கொள்வதோடு ஒரு புதிய நண்பரையும் சங்கத்திற்கு கொண்டு வர வேண்டும்.






வாருங்கள் நண்பர்களே ..வெற்றி என்றும் நம் பக்கம்..

இங்கேயும் என்னைப் பார்க்கலாம் 
Anbu FaceBook Pages

Sunday, March 4, 2012

நமது இலக்கு


இனிய நண்பர் உதவி ஆளுனர், மற்றும் சங்க தலைவர்களுக்கு,

இந்த ஆண்டு மிக முக்கிய பொறுப்பை ஏற்று திறம்பட செயலாற்ற இருக்கிறீர்கள். நானும் உங்களோடு பயணிக்க இருக்கிறேன். வழியில் உங்கள் உதவி தேவைப்படும். நீங்களும் உதவிக்கரம் நீட்ட தயாராக இருப்பீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

சங்க உறுப்பினர்கள் வளர்ச்சியில் கவனம் கொண்டு குறைந்த பட்சம் பத்து சதவீதம் எட்ட வேண்டும் என்பது நமது மாவட்ட ஆளுனர் Rtn.Dr.பழனிவேலு (RID 2980) அவர்களின் விருப்பம். இந்த வளர்ச்சி குறைவானதாக தோன்றலாம். எப்பொழுதும் அதிக பட்ச இலக்கு ஒவ்வொரு சங்கத்தின் தனிப்பட்ட இலக்கு. 

சங்கத்தின் இலக்கினை இங்கே இணைத்துள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பி வைத்தால் நன்றாக இருக்கும். வரும் ஆண்டின் தலைவர் பற்றிய தகவல்கள் முகவரி, அலைபேசி மற்றும் மின் அஞ்சல் முகவரியினையும் தெரிவித்தால் நாம் உடனுக்குடன் தொடர்பு கொள்ள மிகவும் வசதியாக இருக்கும்.




நாம் மீண்டும் பேசுவோம். நன்றி.

Monday, February 27, 2012

நிறைய பேசுவோம்

அன்பிற்கினிய நண்பர்கள் அனைவருக்கும் ரோட்டரி நல்வாழ்த்துக்கள்.

இனி இந்த பக்கத்தில் நாம் நிறைய பேசப்போகிறோம். நமது ரோட்டரி (மாவட்டம் 2980) மாவட்டத்தின் உறுப்பினர்கள் வளர்ச்சியில் தற்போது எப்படி இருக்கிறோம், கடந்த ஆண்டுகளின் வளர்ச்ச்சி எப்படி இருந்தது, இனி அடுத்த ஆண்டில் எப்படி மேலும் முன்னேற்றம் காண இருக்கிறோம் என்பதை பற்றி எல்லாம் நிறைய பேசுவோம். உங்களின் கருத்தக்களை அவ்வப்போது பகிர்ந்து கொண்டு இந்த பக்கத்தினை சிறப்பாக்குங்கள். நன்றி.