Every
Rotary club in the world, no matter how big or small,
Has one
thing in common: FRIENDSHIP.
And it’s
from this base of friendship that we serve our community
ரோட்டரி
ஆண்டின் முதல் மாதம், அனைவருக்கும் முக்கியமான மாதம். துவக்கம் எப்படி மகிழ்ச்சியாகவும்,
பயனுள்ளதாகவும் இருக்கிறதோ அது போலத்தான் இந்த ஆண்டு முழுவதும் இருக்கும். அதனால் உங்கள்
நண்பர்களுக்கும் அலுவலகத்தில் உடன் பணியாற்றும் நண்பர்களுக்கும், உங்கள்
வீட்டிற்கு அருகில் உள்ள நல்லவர்களுக்கும் ரோட்டரியை அறிமுகப்படுத்த இதைவிட
அருமையான நாள் கிடைப்பது கடினம். உடனே செயல்படுங்கள். உங்கள் சங்கத்திற்கு அழைத்து
வாருங்கள். இந்த சந்தோசமான தருணத்தில் உங்கள் மகிழ்ச்சியை பன்மடங்கு அதிகப்படுத்திட
அவர்களையும் உங்களோடு இணைத்து கொள்ளுங்கள்.
இந்த
அருமையான பதவி ஏற்பு விழாவில் புதிய உறுப்பினர்களாக இணைவதில் அவர்களுக்கும்
சந்தோசமாக இருக்கும். அவர்கள் நினைவில் மட்டும் அல்ல உங்கள் நினைவிலும் என்றும்
நீங்கா இடம் பிடிக்க போகும் நாள் இது.
புதிய தலைவர், செயலர் மற்றும்
பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment