Sunday, June 10, 2012

சங்கத்திற்கு நல்ல சக்தியை தாருங்கள்


1.  முதலில நல்ல செயல் திட்டத்தை உருவாக்குங்கள். செயல் திட்டத்தை எப்படி உருவாக்குவது, அதற்கு படிபடியாக உதவி செய்ய சர்வதேச ரோட்டரி அருமையான கையேடு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதனை இங்கே காணலாம்: MembershipDevelopment Resource Guide: 417

2. சங்கத்தை ஊக்குவிக்கவும், நல்ல சக்தியையும் தர உதவும் கையேடு இது.

3.  உங்கள் சங்கம் அடுத்த மூன்று ஆண்டுகளில் எப்படி இருக்க வேண்டும், எந்த உயரத்தை எட்ட வேண்டும் என்று திட்டமிடலாம்.
இதற்கு உதவி செய்ய ஒரு கையேடு-Strategic PlanningGuide

4.  சிறப்பு கூட்டங்கள் ஏற்பாடு செய்து புதிய உறுப்பினர்களுக்கு ரோட்டரி தகவல்களை தரலாம். உங்களை வழி நடத்த
HowHow to Guide for Clubs: 414 உதவும்.

5.    புதிய உறுப்பினர்களை ஈர்ப்பது மிக எளிது. நீங்கள் செயல்படுத்தும் சமூக சேவை திட்டங்களுக்கு அனைவரின் கவனத்தை உங்கள் பக்கம் திருப்பும் சக்தி உள்ளது. அதனால் நல்ல திட்டங்களை செயல்படுத்த உங்களுக்க உதவ ஒரு அருமையான கையேடு.

6. ஒவ்வொரு சங்கமும் சிறந்த தலைவர்களை உருவாக்க வேண்டும். உறுப்பினர்களின் திறமைகளை வளர்க்கவும், பட்டை தீட்டவும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் இளைஞர்கள் பலரை சங்கத்திற்கு கொண்டு வரமுடியும். ஒவ்வொருவரும் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணும் நிலையை உருவாக்க வேண்டும்.

வளமான மிக திறமையான சங்கம் உங்கள் கைகளில் இருக்கிறது. 


No comments:

Post a Comment