Sunday, March 4, 2012

நமது இலக்கு


இனிய நண்பர் உதவி ஆளுனர், மற்றும் சங்க தலைவர்களுக்கு,

இந்த ஆண்டு மிக முக்கிய பொறுப்பை ஏற்று திறம்பட செயலாற்ற இருக்கிறீர்கள். நானும் உங்களோடு பயணிக்க இருக்கிறேன். வழியில் உங்கள் உதவி தேவைப்படும். நீங்களும் உதவிக்கரம் நீட்ட தயாராக இருப்பீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

சங்க உறுப்பினர்கள் வளர்ச்சியில் கவனம் கொண்டு குறைந்த பட்சம் பத்து சதவீதம் எட்ட வேண்டும் என்பது நமது மாவட்ட ஆளுனர் Rtn.Dr.பழனிவேலு (RID 2980) அவர்களின் விருப்பம். இந்த வளர்ச்சி குறைவானதாக தோன்றலாம். எப்பொழுதும் அதிக பட்ச இலக்கு ஒவ்வொரு சங்கத்தின் தனிப்பட்ட இலக்கு. 

சங்கத்தின் இலக்கினை இங்கே இணைத்துள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பி வைத்தால் நன்றாக இருக்கும். வரும் ஆண்டின் தலைவர் பற்றிய தகவல்கள் முகவரி, அலைபேசி மற்றும் மின் அஞ்சல் முகவரியினையும் தெரிவித்தால் நாம் உடனுக்குடன் தொடர்பு கொள்ள மிகவும் வசதியாக இருக்கும்.




நாம் மீண்டும் பேசுவோம். நன்றி.

No comments:

Post a Comment